வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : சனி, 11 மே 2024 (19:49 IST)

விஜய்யின் தவெக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்..!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அந்த அரசியல் கட்சியின் நிர்வாகிகள் பெயர் பொது விளம்பரமாக பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. இந்த நிர்வாகிகள் குறித்து ஆட்சேபனை இருந்தால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்கலாம் என்றும் அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் விஜய் கட்சியும் சீமான் கட்சியும் இணைந்து கூட்டணியாக போட்டியிடப் போவதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. 
 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின்  தலைவர் ஜோசப் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன், தலைமை கழகச் செயலாளர் ராஜசேகரன், இணை கொள்கை பரப்பு செயலாளர் தகிரா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழக வெற்றிக் கழகம் பெயரை பதிவு செய்வதில் ஆட்சேபனை இருப்பவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்தலாம் என பத்திரிகை விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 
Edited by Siva