வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 12 மே 2024 (11:17 IST)

அன்னையரை எந்நாளும் போற்றி வணங்குவோம்..! விஜய் அன்னையர் தின வாழ்த்து.!!

Actor Vijay
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
 
மே மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அன்னையர் தின வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அன்னையர் தின  வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு அன்னையர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அன்னையரை இன்று மட்டுமல்ல எந்நாளும் போற்றி வணங்குவோம் என்று விஜய் தெரிவித்துள்ளார்.