வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2023 (12:12 IST)

தங்கமாக அள்ளி அள்ளி கொடுத்தாலும் திமுக தேர்தலில் வெற்றி பெறாது: செல்லூர் ராஜு

திமுக அரசு வீட்டுக்கு வீடு தங்கமாக அள்ளி அள்ளி கொடுத்தாலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என  மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல திமுக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்றும், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்றும் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியளித்தார்.

 இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே தயாராகி வருவதாகவும் இன்னும் ஒரு சில வாரங்களில் இரு கட்சிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் திமுக கூட்டணி இடையே வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படும் நிலையில் பாஜகவும் தனியாக ஒரு கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran