1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 அக்டோபர் 2023 (19:26 IST)

அமைச்சர் உதயநிதியின் மீதான வழக்கு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி, சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, சனாதனம் பற்றி அவர் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி சனாதனம் பற்றி பேசியதற்கு எதிராக நீதிமன்றத்தில்  இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,’’ சனாதனம்  ஒழிக்க வேண்டுமெனக் கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா? தனிப்பட்டை முறையில் பேசினேனே தவிர அமைச்சர் என்ற முறையில்  பேசவில்லை ‘’என்று அமைச்சர் உதயநிதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ வேறு சட்டத்திலோ எதுவும் குறிப்பிடவில்லை. தனக்கு எதிரான வழக்குத் தொடர்ந்ததில் கண்ணுக்குத் தெரியாமல் பாஜகவின் பங்குள்ளது….என்று உதய நிதி தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை மீண்டும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.