செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 1 ஜூலை 2019 (16:30 IST)

மிட்நைட்டில் உலவும் மர்ம நபர்; ஆட்களை கண்டதும் எஸ்கேப்!

சேலத்தில் நள்ளிரவில் வீடுகளை கதவை தட்டி தப்பி ஓடும் மர்ம நபர் ஒருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 
 
சேலம் அம்மாப்பேட்டையில் கடந்த சில நாட்களாக நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கதவை தட்டி விட்டு ஓடி விடுவதாக கூறப்பட்டு வந்தது. அதோடு, ஒவ்வொரு வீடுகளாக மர்ம நபர் நோட்டமிடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 
 
இதனோடு தற்போது வெளியாகியுள்ள ஒரு சிசிடிவி காட்சி மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது. அந்த சிசிடிவி காட்சியில், அந்த மர்ம நபர் மாடி வழியாக வீட்டிற்குள் நுழைகிறான், பின்னர் வீட்டில் ஆட்கள் இருப்பதைக் கண்டு சட்டையை சுருட்டி கையில் எடுத்துக் கொண்டு தப்பி ஓடுவது பதிவாகி உள்ளது.
 
அந்த மர்ம நபர் யார் எதற்காக வீடுகளை நோட்டமிட்டு வருகிறார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.