வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (18:30 IST)

’ஒருத்தரே போராட முடியாது’... மக்களுக்கு கடிதம் எழுதிய அமைச்சர் !

தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம். மக்கள் தினமும் தங்கள் வேலைக்கு விடுமுறை போட்டு தண்ணிர் பிடிப்பதற்கே ஒரு நாளை செலவழிக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி அவர்கள் செய்தாலும் தண்ணீர் கிடைக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்!
இந்தப் பஞ்சத்தைப்போக்க அரசும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இந்நிலையில் சென்னை மக்களின் பஞ்சத்தைப் போக்க சேலம் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் வேன்கள் மூலம் தண்ணீர்கொண்டு செல்ல எல்லா ஏற்பாடுகளை முதல்வர் செய்துவிட்டதாக தகவல்கல் வெளியாகிவருகின்றன.
 
இதனைத்தொடர்ந்து, கடல்நீரை குடிநீராக்குவதற்கும் , நேற்று முதல்வர் எடப்பாடியார் அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மக்களுக்கு ஒரு கடிதம்  எழுதியுள்ளார். அதில் , எல்லோரும்  எனது பணிவான் வேண்டுகோள்! இனிவரும் 10 ஆண்டுகளுக்கு நம் பூமியில் தற்போதுள்ள வெப்பத்தைவிட 4 டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கும். இமயமலையில் உள்ள பனிக்கட்டிகள் உருகிவிடும். அதனால் நாம் எல்லோரும் புவி வெப்பமயமாதலுக்கு எதிராக களம் இறங்க வேண்டும். முக்கியமாக தண்ணீரை வீணாக்ககக்கூடாது.பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதையும், எரிப்பதையும் கைவிடுவோம்!காரணம் ஒருவரே புவி வெப்பமாகி வருவதற்கு எதிராக போராட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த கடித்துக்கு அனைத்து தரப்பினர்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்துவருகிறது.