செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (15:33 IST)

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலர் பதவியேற்பு

தமிழக அரசில் தலைமைச் செயலராக இருந்த திருமதி கிரிஜா வைத்தியநாதன் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக திரு.சண்முகம் என்பவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தின் தலைமைச் செயலராக இருந்த கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் இன்றோடு முடியும் நிலையில் தற்போது புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் பொறுப்பேற்றுள்ளார்.
 
9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக பதவிவகித்த சண்முகம், 46 ஆவது தலைமைச் செயலாளராக பதவியேற்றார். 2010 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டவர் சண்முகம். மேலும் கடந்த 1985 ஆம் ஆண்டு நேரடியாகத் தேர்வான ஐ.ஏ.எஸ் அதிகாரி சண்முகம் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.