வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 ஜூன் 2019 (15:56 IST)

எப்படி குளிக்க வேண்டும் ? அறிவுரை கூறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி : வைரல் தகவல்

தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறதுர் தண்ணீர் பஞ்சம். இந்தப் பஞ்சத்தைப்போக்க அரசும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுத்துவருகிறது. இந்நிலையில், எரிசக்தி அமைப்பின் செயலர் ஒருவர் முறையாக தண்ணீரை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று அறுவுரை கூறுவது தற்போது வைரலாகி வருகிறது.
முகமது நஜுமுதின் என்பவர் எரிசக்தி துறையின் முதன்மைச் செயலராக பணியாற்றுவருகிறார். இந்நிலையில் இவருக்கு சேலம் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் தண்ணீர் பற்றிய ஆய்வு நடத்தும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து நஜுமுதீன் சேலம் மாவட்டத்தில் உள்ள கமலாபுரம், கொல்லப்பட்டி, ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வருகிறார்.
 
மேலும் வீட்டில் குளிக்கும் போது, பக்கெட்டில் தண்ணீரை நிரப்பிக் குளிக்கும்படி அவர் அறிவுரை கூறினார். மேலும் தண்ணீரை சேமிக்க அரசு எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட பொதுமக்களின் ஒத்துழைப்பிழைப்பில்லாமல் எதையும் சமாளிக்க முடியாது என்று தெரிவித்தார்.