உங்க புரட்சி புஸ்வாணமாகிவிடும்! – ரஜினி முடிவு குறித்து எஸ்.வி.சேகர்!
தான் கட்சி தொடங்குவதற்கான காரணம் குறித்து ரஜினி பேசியுள்ள கருத்துகளை விமர்சித்துள்ளார் பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர்.
நடிகர் ரஜினிகாந்த் எப்போது கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார் ரஜினிகாந்த்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினிகாந்த் “கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையிலேயே இருக்க கூடாது என்றும், அதனால் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்ற திட்டத்தை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் “கட்சி நடத்த பணமும் ஆட்சி நடத்த ராஜதந்திரமும் தைரியமும் தேவை. ஆகவே ரஜினி சொல்வது நிஜத்தில் நடக்காது. புரட்சி இந்தியாவில் வெடிக்காது புஸ்வாணமாகிவிடும். கட்சி ஆட்சி இருவர் கையில் இருந்தால் முதலில் சின்னம் முட்ங்கும். இதுவே வரலாறு.” என்று கூறியுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்துள்ள ரஜினி ஆதரவாளர்கள் சிலர் பாஜக கட்சியே ரஜினி சொன்ன முறையில்தான் இயங்குவதாகவுன், கட்சிக்குள் இருக்கும் எஸ்.வி.சேகருக்கு இதுக்கூட தெரியவில்லையே என்றும் கிண்டல் செய்துள்ளனர்.