வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 மார்ச் 2020 (11:14 IST)

ரஜினி போட்ட மூன்று ரூல்ஸ் : ஆடி போன நிர்வாகிகள்!

கட்சி தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகிகளோடு பேசிய ரஜினிகாந்த் தற்போது செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.

2017ல் கட்சி தொடங்குவதாக அறிவித்த ரஜினிகாந்த் தற்போது அரசியலில் நுழைவதற்கான பணிகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ஒரு விஷயத்தில் ஏமாற்றம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி வரும் ரஜினிகாந்த் முக்கியமான மூன்று விதிமுறைகளை கூறியுள்ளார். அவையாவன..
  1. கட்சியில் அதிக பதவிகள் கூடாது
தேர்தல் சமயங்களில் ஒரு கட்சிக்கு பல பதவிகள் தேவைப்படுகின்றன. தேர்தல் முடிந்த பின்பும் கட்சிகளில் அதிக பதவிகள் இருக்கும்போது ஊழல்கள் அதிகரிக்கின்றன. அதனால் தேர்தலுக்கு பிறகு தேவையான அளவு பதவிகளை மட்டுமே கட்சி கொண்டிருக்க வேண்டும்.
  1. இளைஞர்களுக்கு வாய்ப்பு
கட்சியில் 60 முதல் 65 சதவீத எம்.எல்.ஏ சீட்டுகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும்.  வேறு கட்சியில் உள்ள திறமையானவர்கள் வந்தால் வாய்ப்பு அளிக்கப்படும். இதுதவிர ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளையும் அரசியலுக்கு கொண்டு வர திட்டம். இளைஞர்கள் சட்டபேரவை செல்ல பாலமாக ரஜினி இருப்பார்.
  1. கட்சிக்கு தனி தலைமை, ஆட்சிக்கு தனி தலைமை
மற்ற கட்சிகளை போல கட்சி தலைவர், ஆட்சி தலைவர் என அனைத்து பதவிகளிலேயும் ஒரே நபரே இருக்க மாட்டார். ஆட்சியில் உள்ளவர்களை கட்சி தலைமை இடையூறு செய்யக்கூடாது. கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதுதான் என் நிலைபாடு. கட்சி தலைமை கொடுக்கும் வாக்குறுதிகளை ஆட்சி தலைமை மக்களுக்கு நிறைவேற்றி தர வேண்டும்.

இப்படியாக மூன்று விதிமுறைகளை விதித்துள்ளார் ரஜினிகாந்த். அன்றைய மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பில் மூன்றாவது விதிமுறையை மட்டும் சொன்னதாகவும் அதற்கு மாவட்ட நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்தது ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.