1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman sing a song to make election campaign

ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..! – பாடி வாக்கு சேகரிக்கும் சீமான்!

Tamilnadu
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி ஓட்டு சேகரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் கட்சி வேட்பாளர்களுக்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதி வாரியாக பயணித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

அவ்வாறாக அண்மையில் பிரச்சாரம் ஒன்றில் சீமான் பாடிய பாடல் வைரலாகியுள்ளது. மம்பட்டியான் திரைப்படத்தில் வரும் பாடலை வரிகள் மாற்றி “ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத” என அவர் பாடியுள்ள பாடலை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவேற்றியுள்ளார். இந்த பாடல் நாம் தமிழர் கட்சியினரிடையே வைரலாகி வருகிறது.

அடுத்த கட்டுரையில்
என் தாயை இப்படி பேசிவிட்டார்களே! பிரச்சாரத்தின்போது கண்கலங்கிய முதல்வர்!