1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rahul Gandhi criticize Edappadi palanisamy

எந்த தமிழனும் மண்டியிட்டதில்லை… ஆனா முதல்வர்..? – ராகுல்காந்தி விமர்சனம்!

Tamilnadu
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த ராகுல்காந்தி, தமிழக முதல்வர் அமித்ஷாவிடம் மண்டியிட்டு கிடப்பதாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இதற்காக சென்னை வந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் பேசியபோது “சமீப காலமாக திருக்குறள் உள்ளிட்ட தமிழ் நூல்களை படித்து வருகிறேன். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் 3000 வருட வரலாற்றில் எந்த தமிழனும் மண்டியிட்டதில்லை. ஆனால் முதல்வர் பழனிசாமி, அமித்ஷாவின் காலில் விழுந்து கிடப்பதை பார்க்கையில் எனக்கு கோவமாக வருகிறது” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா தோழி சசிகலா போயஸ் கார்டனில் குடியேறுகிறார்; சுதாகரனையும் வெளியில் கொண்டுவர முயற்சி