செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 2 செப்டம்பர் 2023 (14:25 IST)

ஒரு நாள் நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்கமாட்டீர்கள்: சீமான் ஆவேசம்..!

நான் ஒரு நாள் வெடித்து சிதறினால் அப்போது ஒருவரும் தாங்க மாட்டீர்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. 
 
நேற்று விஜயலட்சுமி திருவள்ளூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது புகாரை தெரிவித்தார்.  இந்த நிலையில் விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி என்பவரும் குரல் கொடுத்து வருகிறார். 
 
இந்த நிலையில் நான் ஒரு நாள் வெடித்து சிதறுவேன், அப்போது ஒருவரும் தாங்க மாட்டீர்கள் என விஜய் லட்சுமியின் புகார் கொடுத்து சீமான் ஆவேசம் அடைந்துள்ளார். 
 
நான் உயர்ந்த லட்சியங்களை கொண்டு வருகிறேன் என்றும் நீங்கள் இரண்டு லட்சுமிகளை கொண்டு வந்து அவதூறு வீசுகிறீர்கள் என்றும். நான் அமைதியாக இருப்பதால் என்னுடைய மௌனத்தால் விஜய லட்சுமி சொல்வதெல்லாம் உண்மை ஆகாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran