KGF ரிலீஸின்போது அதை தடுக்க எவ்வளவு நேரமாகும்? சீமான்
கேஜிஎஃப் வெளிவரும்போது, அதை வெளியிடமுடியாது என்று அறிக்கை வெளியிட்டால் என்னாகும்? இதை அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்என்று சீமான் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் இந்த புரமோசன் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சித்தார்த்திற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சித்தார்த் மேடையில் இருந்து வெளியேறிய பின்னர் அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.
இதுபற்றி இன்று செய்தியாளர்களின் கேள்விகு பதிலளித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,சித்தார்த் ஒரு கலைஞர் . அவர் காவிரி பற்றி பேசவில்லை. காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டுமென கேட்கவில்லை. அது அரசியல் தலைவர்கள் பேச வேண்டியது. யாஷின் கேஜிஎஃப் 2 பாகங்கள் வந்துள்ளது. ஆனால், விஜய் உள்ளிட்டோரின் படங்களை அங்கே வெளியிடுவதில்லை. அங்கு சத்தம் போடுபவர்களை காவலர்கள் அப்புறப்படுத்தவில்லை. அங்கு தமிழர்களை அடிக்கும் போது குரல் கொடுக வேண்டும். சொந்த நாட்டில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. நடிகர் சித்தார்த், படத்தில் நடித்தார். அது பற்றி பேசுகிறார். இங்கு தயாரிப்பதை பக்கத்து மா நிலத்தில் வெளியிடமுடியவில்லை என்றால் எப்படி? கேஜிஎஃப் வெளிவரும்போது, அதை வெளியிடமுடியாது என்று அறிக்கை வெளியிட்டால் என்னாகும்? இதை அங்குள்ளவர்கள் யோசிக்க வேண்டும்என்று தெரிவித்துள்ளார்.