1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman's Statement Sparks Controversy Amid Internal Party Resignations

நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரும் விலகவில்லை.. அவர்கள் எல்லாம் ஸ்லீப்பர் செல்: சீமான்

நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சியிலிருந்து யாரும் விலகவில்லை என்றும், நான் தான் அவர்களை ஸ்லீப்பர் செல்லாக அனுப்பி வைத்திருக்கிறேன் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர் என்ற தகவல் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. இன்று கூட, கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக தகவல் வெளியானது.

இது குறித்து கேள்விக்கு பதிலளித்த சீமான், "நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுபவர்கள் எங்களின் ஸ்லீப்பர் செல்லாக உள்ளனர். அவர்கள் கட்சியில் இருந்து விலகவில்லை. நான் தான் அவர்களை மற்ற கட்சிகளுக்கு உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைத்துள்ளேன். அவர்கள் அங்குசேர்ந்து உளவு பார்த்து, அதன் பின் மீண்டும் எங்கள் கட்சிக்கு திரும்புவார்கள்," என்று கூறினார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகிக் கொண்டே இருப்பது கட்சிக்கு பின்னடைவாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பை சமாளிக்கவே, சீமான் ரஜினியை சந்தித்து, கட்சியின் பிரச்சனைகளை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று விலகிய நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து விவகாரம்: இளைஞர் விக்னேஷுக்கு ஜாமின் மறுப்பு!