வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2024 (15:28 IST)

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

Seeman
சீமான் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நாம் தமிழர் கட்சியில் ஏற்கனவே சில மாவட்ட செயலாளர்கள் விலகி உள்ள நிலையில், தற்போது இன்னொரு மாவட்ட செயலாளர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்த சுகுமார் ஆகியோர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சாட்டினர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அதன் பின்னர், விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் விலகினர். சமீபத்தில், மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி கட்சியிலிருந்து விலகி, பெண்களுக்கு அந்த கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், தற்போது சேலம் மாவட்ட செயலாளர் அழகாபுரி தங்கம் என்பவர் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார். சீமான் மீது அவர் என்னென்ன குற்றச்சாட்டுகளை சொல்ல இருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Edited by Mahendran