வியாழன், 19 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2024 (15:23 IST)

120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.. தவெக தலைவர் விஜய் அதிரடி..!

Bussy Anand
தமிழக வெற்றி கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், மாவட்ட செயலாளர்கள் குறித்த பட்டியல் தயாராகிவிட்டதாகவும், அதனை கட்சியின் தலைவர் விஜய் இறுதி செய்து விட்டதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம், தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறிவரும் நிலையில், சமீபத்தில் நடந்த அக்காட்சியின் முதல் மாநில மாநாடு பரபரப்பு ஏற்படுத்தியது.

திமுக மற்றும் பாஜகவை ஒரே நேரத்தில் அட்டாக் செய்யும் விஜய், அடுத்த கட்டமாக தனது கட்சியின் மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய இந்த முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக்கழகத்தின் 120 மாவட்ட செயலாளர்கள் குறித்த ஆலோசனையை விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த் செய்ததாகவும், விரைவில் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பெரும்பாலும் விஜய் ரசிகர் மன்றத்தின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் தான் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், ஏற்கனவே அவர்களிடம் இன்டர்வியூ எடுத்து, எந்தெந்த மாவட்டத்திற்கு யார் யார் செயலாளர்கள் என்பது குறித்த முடிவை விஜய் எடுத்து விட்டதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva