1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 மே 2021 (13:34 IST)

திமுக வேட்பாளரை விட 5000 வாக்குகள் பின்னடவில் சீமான்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை 110 தொகுதிகளுக்கான முன்னணி நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் ஒரு தொகுதியில் கூட நாம் தமிழர் கட்சி முன்னணி பெறவில்லை. இத்தனைக்கும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்களைக் களமிறக்கியது. வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பளித்தது போன்ற செயல்களால் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றது. ஆனால் மக்கள் நீதிமய்யம், பாஜக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் கூட ஒரு சில தொகுதிகளில் முன்னிலைப் பெற்ற நிலையில் நாம் தமிழர் இன்னும் ஒரு தொகுதியில் கூட முன்னிலைப் பெறவில்லை. ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அக்கட்சியின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் 4 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர் 5980 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். அவருக்கு போட்டியாக நின்ற திமுக வேட்பாளர் ஆர் பி சங்கர் 10961 வாக்குகள் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார்.