திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (11:25 IST)

”காசை அங்க வாங்கிட்டு.. ஓட்டை இங்க போட்டுடுங்க” – சீமான் பேச்சு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு சேகரித்த சீமான் கட்சிகள் கொடுக்கும் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தொகுதியில் மேனகா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் “தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து பலரும் கேட்கிறார்கள். மக்கள் மீதான நம்பிக்கையில்தான் தனித்து போட்டியிடுகிறோம். எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மற்ற வேட்பாளர்கள் தரும் பணத்தை வந்த வரைக்கும் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் நமது பணம் எப்படி அவர்களிடம் போனது என்பதையும் சிந்திக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், “மக்கள் பிரச்சினை போராட்டம் என்றால் நாங்கள் வர வேண்டும். ஆனால் ஓட்டை மட்டும் பிரச்சினை செய்யும் அவர்களுக்கு போடுகிறீர்கள். நீங்கள் எங்களுக்கு வாக்களிக்காவிட்டால் பிறகு பிரச்சினையை வேடிக்கைதான் பார்க்க முடியும்” என்று பேசியுள்ளார்.

Edit by Prasanth.K