1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (16:33 IST)

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்: பிரச்சாரத்திற்கு வருகிறாரா ராகுல் காந்தி?

rahul
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வர வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறின. 
 
இந்த நிலையில் இன்று சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் பிரமுகர். தினேஷ் குண்டு ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வர வாய்ப்பு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வசம் இருந்த நிலையில் அந்த தொகுதியை கைப்பற்றியே ஆக வேண்டும் என காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தீவிரமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva