கோடநாடு விவகாரம் பற்றி அண்ணாமலை பேசாதது ஏன்? சீமான் கேள்வி..!
கோடநாடு விவகாரம் குறித்து இதுவரை அண்ணாமலை பேசாதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அவர்களை காப்பாற்ற வேண்டிய அவசியம் அண்ணாமலைக்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்
தமிழகத்தில் உள்ள மொத்த ரவுடிகளும் ஊழல்வாதிகளும் பாஜகவில் தான் உள்ளனர் என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.
அதிமுகவில் இருப்பவர்கள் புனிதமானவர்கள் என்பதை காட்ட திமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுகிறார் என்ற கேள்வியையும் சீமான் எழுப்பி உள்ளார்
இந்த கேள்விகளுக்கு அண்ணாமலை நடைபயணத்தின் போது பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran