1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (09:02 IST)

ஆளுனரை திடீரென சந்திக்கும் அண்ணாமலை.. திமுக சொத்துப்பட்டியல் வழங்குவதாக தகவல்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கவர்னரை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது திமுக தலைவர்கள் தொடர்பான சொத்து பட்டியல் மற்றும் டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கை வழங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
 திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தமிழக பாஜக அண்ணாமலை திமுக ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக சமீபத்தில் திமுக தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்க இருக்கும் அண்ணாமலை திமுக தலைவர்கள் தொடர்பான இரண்டாவது ஊழல் பட்டியலையும் வெளியிட உள்ளார். 
 
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ரவி அவர்களை இன்று மதியம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பின்போது திமுக தலைவர்கள் தொடர்பான சொத்து பட்டியல், டாஸ்மாக் குறித்த வெள்ளை அறிக்கை ஆகியவற்றை  அவர் ஆளுநரிடம் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva