புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (08:48 IST)

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிடாதது ஏன் ? சீமான் பதில்!

நேற்று  நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிவிக்கப்பட்டார்கள். அதில் சீமான் சென்னையின் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். அதில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்பட்டு 117 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்னதாக சீமான் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அவரை வீழ்த்துவேன் என சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது திருவொற்றியூருக்கு மாறியது குறித்து ‘ஒருவரை எதிர்த்து வெல்வதைக் காட்டிலும் என் மக்களைக் காப்பதே முக்கியம் என்பதால் திருவொற்றியூர் தொகுதியில் நிற்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.