சீமான் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்

seeman
சீமான் போட்டியிடும் தொகுதி அறிவிப்பு: 234 வேட்பாளர்களையும் அறிவித்தார்
siva| Last Updated: ஞாயிறு, 7 மார்ச் 2021 (20:13 IST)
இன்று நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிவிக்கப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இந்த நிலையில் சற்று முன் நாம் தமிழர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது இதில் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அரசியல் இலாபம் தரும் தொழிலாக பல கட்சிகள் மாற்றி விட்டனர் என்றும் கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சியை முன்னெடுக்கிறது என்றும் பெண்களுக்கு 50% கொடுப்பது எங்கள் கடமை என்றும் ஆணும் பெண்ணும் சமம் என்பதை எங்கள் கொள்கை என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
மேலும் விவசாயிகள் வாழ்ந்தால் நாடு வாழ்ந்து விடும் என்றும் விவசாயிகள் வாழவில்லை என்றால் அந்த நாடு சுடுகாடாக மாறிவிடும் என்றும் சீமான் தெரிவித்தார். வரலாறு நமக்கு வழிகாட்டுகிறது என்றும் அந்த வரலாற்றை பின்பற்றி நாம் மாற்றம் செய்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்


இதில் மேலும் படிக்கவும் :