செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 7 மார்ச் 2021 (20:01 IST)

பெரியார், அண்ணா, கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் ஸ்டாலின்: துரைமுருகன்

பெரியார் அண்ணா கலைஞர் இல்லாத குறையை நீக்கியவர் முக ஸ்டாலின் என திருச்சி திமுக பொதுக் கூட்டத்தில் துரைமுருகன் பேசினார். தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திருச்சியில் திமுக சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது
 
இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் ’பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை கலைஞர் இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களை கட்டிக்காக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் தமிழகத்தை வாழ வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்
 
மேலும் இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக புனித போராட்டம் திமுக தலைவர் முக ஸ்டாலின் கோட்டைகளில் நாளிலிருந்து தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு மாநாட்டை நான் பார்த்ததில்லை என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்