1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku shankar comment about karthika arrest

சீமான் 50 கோடி சொத்து சேர்த்துட்டார்!.. நாதக தம்பிகளே உஷார்!.. சவுக்கு சங்கர் அட்வைஸ்!..

seeman
சமீபத்தில் நடந்து முடிந்த தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் கட்சி வேட்பாளராக களமிறங்கியவர் கார்த்திகா. பிரச்சார மேடைகளில் முதல்வர் விஜயை மிகவும் அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் இவர் தொடர்ந்து பேசி வந்தார். அதோடு தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்யும் வழியில் அமர்ந்து போராட்டமும் நடத்தினார்.

இந்நிலையில்தான் நேற்று அதிகாலை 5:30 மணி அளவில் வீட்டிலேயே வைத்து அவரை காவல்துறை கைது செய்தது. அவருடைய கணவர் உள்ளிட்ட சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சமூகவலைத்தளங்களில் பொங்கி வருகிறார்கள். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் ‘கார்த்திகாவை தேர்தல் நேரத்தில் கைது செய்திருந்தால் இந்த காரணத்தினால்தான் நாங்கள் தோற்றோம்.. இல்லையென்றால் வெற்றி பெற்றிருப்போம் என்று சீமான் கூசாமல் பேசியிருப்பார். துரைமுருகன் 5 வீடியோக்களை போட்டிருப்பார்..

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் First Batch-ஐ பார்த்து சொல்கிறேன்.. வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.. எளிய தமிழ் பிள்ளைகள் என்று சொல்லியே சீமான் 50 கோடிக்கு சொத்து சேர்த்துவிட்டார்.. கார்த்திகாவை கைது செய்தது விஜயோ, தவெகவோ இல்லை.. இது ஒரு சிஸ்டம்..

நாம் தமிழர் தம்பிகளே!.. வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.. சீமானுக்கு அடுத்த இடத்தில் உள்ள துரைமுருகன் போன்றவர்கள் நிறைய காசு சம்பாதித்து விட்டார்கள்.. நீங்கள் வளர்ந்தால் ‘நான்தான் கட்சி’ என்று உன்னை சீமான் அனுப்பிவிடுவார்.. இந்த ஆளுக்காக உண்டியலை குலுக்கி பாவத்தை சம்பாதிக்காதீர்கள்’ என கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மசூதியில் நெருக்கம்!.. கணவன், மனைவிக்கு மரண தண்டனை!.. சவுதி அரேபியாவில் அதிர்ச்சி...