1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police explain why karthika is arrested

நாம் தமிழர் கார்த்திகா கைது ஏன்? - காவல்துறை விளக்கம்!..

karthika
தாராபுரம் இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகாவை தமிழக காவல்துறை கைது செய்திருக்கிறது. அவரோடு அவரின் கணவர் மற்றும் சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு சீமானும், திமுக தலைவர் ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கார்த்திகா கைது தொடர்பாக தமிழக காவல்துறை விளக்கமளித்துள்ளது.

02.10.2026 அன்று தாராபுரம் - உடுமலை மாநில நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நாம் தமிழர் கட்சியினர் பிளக்ஸ் பேனர் வைத்தனர். பேனரை அகற்ற முயன்ற காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசிய நாதக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனால் கார்த்திகா உள்ளிட்ட சிலர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகாத வார்த்தைகளால் பேசி காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே, கார்த்திகா உள்ளிட்ட நாதகவினர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தாராபுரத்தில் முதல்வர் விஜய் ரோட் ஷோ செல்லும் வழியில் அனுமதியின்றி கூடி காவல்துறையினருக்கு இடையூறு செய்தனர். இது தொடர்பாக தவெக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 57 பேர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பகுதி செய்யப்பட்டிருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
நயினார் நாகேந்திரனை கைது பண்ண தில் இருக்கா?!.. கனிமொழி கேள்வி!..