செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 7 டிசம்பர் 2023 (17:54 IST)

நாளை எந்தெந்த பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது என்பதை பார்த்து வந்தோம். 
 
இந்த நிலையில் நேற்றுவரை சென்னை உள்பட பல பகுதிகளிலும் இன்றும் ஒரு சில பகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
 
செங்கல்பட்டு மாவட்டம்  பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஆறு வட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளதால் இந்த பகுதியில் உள்ள மாணவர்கள் மட்டும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டியதில்லை.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை என அறிவிப்பு!
 
Edited by Mahendran