திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2023 (20:52 IST)

கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை

Chennai Beach
சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்த நிலையில்,  கனமழையிலிருந்தும், புயலிலிருந்தும் பொதுமக்களை காப்பாற்ற அரசு தீவிர நடவடிக்கைகள்  மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் நேற்றிரவு முதல் மிககனமழை பெய்து வந்த நிலையில், சில இடங்களில் மழை சற்று குறைந்துள்ள போதிலும் காற்றடித்து வருகிறது. 

மிக்ஜாம் புயல் எதிரொலியால் கனமழை சூழ்ந்துள்ள சென்னையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து பொதுமக்களை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்து வருகின்றனர்.

சென்னையில் வரலாறு காணாத மழை பெய்து வரும் நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (டிசம்பர் 5 ஆம் தேதி செவ்வாய்கிழமை ) பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.