1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 3 நவம்பர் 2020 (10:01 IST)

பள்ளி, கல்லூரிகள் திறப்பது தள்ளி வைக்கப்படுகிறதா? தமிழக அரசு திடீர் ஆலோசனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வரும் 16ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவித்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ததாகவும் இந்த ஆலோசனையில் கொரோனா மற்றும் பருவ மழையை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கலாமா என்று அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கேட்டதாகவும் தெரிகிறது
 
இதனால் வரும் 16ஆம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கும் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்படும் என்றும் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு ஒத்திவைக்கப்படலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. எனினும் இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து முறையான அறிவிப்பு வந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது