தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் இந்த நகரங்களில் எல்லாம் தண்ணீர்ப் பற்றாக்குறை அபாயம்! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!
- சென்னையில் குறையும் கொரோனா; 4 தெருக்கள்தான் மிச்சம்! – சென்னை மாநகராட்சி!
- ட்ரம்ப் கூட்டத்திற்கு போன 700 பேர் கொரானால் இறப்பு! – அதிர்ச்சியளிக்கும் ரிப்போர்ட்!
- நாசர் மகன் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கேபிள் சங்கர்!
- திரௌபதி படத்தை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனம்!
10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பு இல்லை! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!
10 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இந்தி மொழியை திணிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அதற்கு பள்ளிக் கல்வித்துறை பதிலளித்துள்ளது.
கொரோனா காரணமாக இப்போது பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் திறன் அறிவோம் என்ற குறுவினா ஒன்றில் இந்தியை கற்க விரும்பும் காரணத்தை குறிப்பிடுக எனக் கேள்வி இடம்பெற்று இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை எழுந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை அதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள வினாவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர 3ஆவது மொழியாக கற்க விரும்பும் மொழி எது? அதற்கான காரணம் எழுது என்றுதான் கேட்கப்பட்டுள்ளதாக பதிலளித்துள்ளது. ஆனால் அதற்குக் கீழாகவே இந்தி மொழியைக் கற்க காரணம் என்று கேட்கப்பட்டு இருப்பது குறித்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
