செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated: சனி, 3 டிசம்பர் 2022 (14:58 IST)

சென்னையில் பள்ளி மாணவன் தற்கொலை!

சென்னையில், ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை பகுதியில் வசிப்பவர் மகேஷ். இவருக்கு கவின்குமார், தர்ஷன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்கள்  இருவரும் கெட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மற்றும் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கவின்குமார் நேற்று தன் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், கவினை புகையிலைப் பயன்படுத்தியதக ஆசிரியர் குற்றம்சாட்டி பலரது  முன்னிலையில் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றார் எனவும், மாணவன் இதுபற்றி பெற்றோரிடம் புகாரளித்துள்ள நிலையில்,  நேற்று காலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.