1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (19:07 IST)

முதலமைச்சர் வருகை எதிரொலி.. 5 மாவட்டங்களில் பள்ளி விடுமுறை ரத்து..!

school
தமிழக முதலமைச்சரின் வருகை காரணமாக மதுரை உள்பட ஐந்து மாவட்டங்களில் வரும் மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் வரும் மார்ச் 4ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளார். மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அவர் ஆய்வு செய்ய உள்ளதை அடுத்து இந்த ஐந்து மாவட்டங்களில் மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 
 
மார்ச் 4ஆம் தேதி வேலை நாளைக்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு நடத்தி வரும் நிலையில் தற்போது ஐந்து மாவட்ட பள்ளிகளிலும் ஆய்வு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran