புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (08:11 IST)

மாணவிகளிடம் அந்தரங்கக் கேள்விகளைக் கேட்ட கரஸ்பாண்டண்ட் – பெற்றோர் கொந்தளிப்பு !

கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளிடம் அந்தரங்கக் கேள்விகளைக் கேட்டதாக பள்ளி தாளாளர் மேல் பெற்றோர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் ரத்னபுரி என்ற ஊரில் தனியார் பள்ளியில் நேற்று மாணவிகளின் பெற்றோர் சிலர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவானது. அதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் அவர்கள் அதிர்ச்சியளிக்கும் தகவல்களை சொல்லியுள்ளனர்.

பள்ளியின் தாளளர் ஆண்டனி ராஜ் மாணவிகளிடம் ‘நீ வயசுக்கு வந்துட்டியா ?’ என ஆபாசமாகக் கேள்விகளை கேட்டதாகவும், அது தொடர்பான வீடியோக் காட்சிகளைக் காட்டுவதாகவும் மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்களிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இது சம்மந்தமாக பள்ளி நிர்வாகத்திடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.