புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 26 அக்டோபர் 2019 (18:55 IST)

பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பிய போக்குவரத்து காவலர்... வைரல் வீடியோ

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர், சில தினங்களுக்கு முன்பு, சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, ஒரு பெண் தனது மகனுடன் வாகனத்தில்வந்தார். அவரிடம் ஆவணங்கள் இருந்தபோதும்கூட வண்டியி லைசென்சர் விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக கூறி அப்பெண்ணை காவல்ட் நிலையத்தில் 1 மணிநேரத்துக்கு மேல் காக்க வைத்தார்.
 
அதன்பின், அப்பெண்ணிடம் மொபைல் எண்ணை வாங்கிவிட்டு அனுப்பினார். இந்நிலையில் நேற்று அந்த எண்ணிற்கு , போக்குவரத்து காவலர் ஆபாச வீடியோ அனுப்பியதாகத் தெரிகிறது.
 
அதனால் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார். இதை உறவினர்களுக்கு அவர் தெரியப்படுத்த, இன்று ராஜமாணிக்கத்தை பிடித்து கேள்வி கேட்டனர்.
 
இதனையடுத்து, போக்குவரத்து உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கத்தை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பு உத்தரவிட்டார்.