செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 4 நவம்பர் 2019 (20:55 IST)

லத்தியை வீசி பைக்கை நிறுத்திய போலீஸ்! லாரியில் மோதிய இளைஞர்கள்! – கோவையில் பரபரப்பு

கோவை அருகே பைக்கில் சென்ற இளைஞர்களை லத்தியை வீசி போலீஸ் நிறுத்த முயல, அது விபத்தில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் அருகே உள்ளே குனியமுத்தூரை சேர்ந்த இளைஞர்கள் மூன்று பேர் அருகிலுள்ள ஆழியார் அணையை சுற்றிப் பார்க்க சென்றிருக்கிறார்கள். திரும்ப வரும் வழியில் தென் சங்கம்பாளையம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

போலீஸார் நிற்க சொல்லியும் அவர்கள் வேகமாக தாண்டி போனதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த இளைஞர்கள் மீது லத்தியை தூக்கி வீச அது பைக் டயரில் மாட்டி, இளைஞர்கள் எதிரே வந்த லாரியில் மோதி கீழே விழுந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒருவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்ற இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் உடனடியாக அந்த இளைஞர்களை மீட்டு மருத்துவமனை அனுப்பியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வாகன சோதனை என்ற பெயரில் காவலர்கள் அத்து மீறுவதாகவும் மக்கள் புகார் அளித்து சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர். பிறகு அவர்களை சமாதானம் செய்து போலீஸார் திரும்ப அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.