செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (07:22 IST)

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

கனமழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று நேற்று அறிவிப்பு வெளியான நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் வெளியான தகவலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எனவே மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் இன்று பள்ளிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் மட்டுமின்றி அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலர்களுக்கும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva