ஜகமே தந்திரம் டீசர்… சைலண்ட் மோடில் தனுஷ் – பின்னணி என்ன?

Last Modified செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (10:45 IST)

ஜகமே தந்திரம் படத்தின் டீசர் நேற்று இணையத்தில் வெளியான நிலையில் அதை பற்றி தனுஷ் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’’ ஜகமே தந்திரம்’’ படம் ஒடிடியில் ரிலீஸாகும் என இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று
தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இப்படம் படக்குழுவினரின் கடின உழைப்பால் உருவாகியுள்ளது. இப்படம் உலகமெங்கும் 190 நாடுகளில் நெட்பிளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகிறது எனக்கூறி இப்படத்தின் டீசரையும் இன்று வெளியிட்டார்.

ஏற்கனவே இப்படம் ஓடிடியில் வெளிட நடிகர் தனுஷ் மற்றும் கார்த்திக்சுப்புராஜ் விரும்பாத நிலையில், தயாரிப்பாளர் சஷிகாந்த் தானாகவே இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது. இதனால் தனுஷுக்கும் தயாரிப்பாளர் சஷிகாந்துக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசரை நெட்பிளிக்ஸ் நேற்று வெளியிட்ட நிலையில் அதை தனுஷ் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிரக்கூட இல்லை. மேலும் அந்த டீசரைப் பற்றி எந்த ட்வீட்டும் அவர் வெளியிடவில்லை.இதில் மேலும் படிக்கவும் :