வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 5 மே 2024 (11:48 IST)

சவுக்கு சங்கருக்கு மே 17ம் தேதி வரை நீதிமன்ற காவல்.. சிறையிலடைக்க உத்தரவு..!

பிரபல யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் அவரை மே 17ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெண் காவல்துறையினர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஊடகம் ஒன்றில் பேசியதற்காக சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று தேனியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்

அதன் பின்னர் தேனியில் இருந்து அவர் கோவை கொண்டு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டதை அடுத்து அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு பின் அவர் மீண்டும் கோவை அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் அவருக்கு 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து போலீசார் குறித்து அவதூறு பேச்சு தொடர்பான வழக்கில் கோவை நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva