1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. savukku sankar case supreme court order

சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம்

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கருக்கு எதிரான 16 வழக்குகளின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதிதாக பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்ட வழக்கை எதிர்த்தும் மனுத்தாக்கல் செய்ய சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பெண் காவல்துறை அதிகாரி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது உள்பட சவுக்கு சங்கர் மீது மொத்தம் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீது கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், நீலகிரி, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தன்மீதான 16 வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சார்பில்  மனுத்தாக்கல் செய்த நிலையில் சவுக்கு சங்கர் மீதான 16 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 17 வழக்குகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Siva
அடுத்த கட்டுரையில்
தொடர் விடுமுறை எதிரொலி - விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு.! பயணிகள் அதிர்ச்சி..!!