திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (16:06 IST)

#SaveTheniFromNEUTRINO: தளபதி ரசிகர்களால் டிரெண்டாகும் சமூக பிரச்சனைகள்!!

#SaveTheniFromNEUTRINO: தளபதி ரசிகர்களால் டிரெண்டாகும் சமூக பிரச்சனைகள்!!
நியூட்ரினோவிடம் இருந்து தேன்க்யை காப்பாற்றுங்கள் என்பதை #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக் மூலம் தளபதி ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். 
 
செப் 19 தேதி பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், சமூக வலைத்தளங்களை நல்ல விஷ்யங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்சனைகளை டிரெண்டாக்குங்கள் என கூறியிருந்தார். இதை கற்பூரம் போல் பிடித்துக்கொண்ட விஜய் ரசிகர்கள் அன்று முதல் சமூக பிரச்சனைகளை டிரெண்டாக்கி வருகின்றனர்.
 
#JusticeforSubasri-ல் துவங்கி அதனை தொடர்ந்து #KEEZHADIதமிழ்CIVILIZATION போன்ற இரு ஹேஸ்டேக்குகள் டிரெண்டாக்கப்பட்ட நிலையில் தற்போது #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
விஜய் ரசிகர்கள் இதை துவங்கி வைத்தாலும் சமூக பிரச்சனை என்றதும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இதனை டிரெண்டாக்கி வருகின்றனர்.