செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்
அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை அடுத்து அமித்ஷாவின் பேட்டிகளிலும் அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அடுத்து செங்கோட்டையன் திடீரென டெல்லி அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது.
மேலும் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகியது. இதைக் கொண்டே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
Edited by Siva