1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala welcome vehicles two suddenly fire

சசிக்கலாவை வரவேற்க வந்த கார்கள்; திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிர்ச்சி!

Tamilnadu
சசிக்கலா வருவதையொட்டி அவரை வரவேற்க சென்ற கார்களில் இரண்டு தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி வழியாக சென்னை வரும் அவருக்கு பல இடங்களில் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரை வரவேற்க பலர் காரில் சென்றும் வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே சசிக்கலாவை வரவேற்க சென்ற கார்களில் இரண்டில் திடீரென தீப்பற்றியது. வாகனத்தில் இருந்தவர்கள் பாதுகாப்பாய் வெளியேறிவிட்ட நிலையில் வாகனங்கள் பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு; உதவிக்கு வரும் இங்கிலாந்து பிரதமர்!