என்.டி.ஏவில் இணைய விரும்பிய சசிகலா!.. எடப்பாடி பழனிச்சாமிக்கு தூது.. திரைமறைவு பேரம்!..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் அவரின் நிழல் போல இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவை யாராவது சந்திக்க வேண்டுமானால் முதலில் சசிகலாவைதான் சந்திக்க வேண்டும்.. அதேபோல் முக்கிய முடிவுகளையும் சசிகலாவே எடுப்பார்.
அதனால்தான் அதிமுக எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் சசிகலாவிடம் அடிபணிபுரிந்து நடந்தார்கள். ஜெயலலிதா மறைந்த போது நீங்கள்தான் கட்சியை காப்பாற்ற வேண்டும் என சசிகலா காலில் விழுந்தார்கள்..
ஆனால், சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்டதால் கூவத்தூர் விடுதியில் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கி விட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. சிறைவாசம் முடிந்து 4 வருடங்களுக்கு பின் விடுதலை ஆனார். ஆனால் அந்த நான்கு வருடங்களில் கட்சி மற்றும் ஆட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார் பழனிச்சாமி. அதோடு சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கட்சிக்குள் வராமல் பார்த்துக் கொண்டார். இது சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கோபப்படுத்தியது..
அதேநேரம் அந்த கோபத்தை மறந்து டிடிவி தினகரன் தற்போது அதிமுக இணைந்திருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டார். சசிகலா இப்போது தனித்துவிடப்பட்டிருக்கிறார். இந்நிலையில், திமுகவுக்கு எதிரான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விரும்பிய சசிகலா அவருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே நெருக்கமான ஒரு தொழிலதிபரின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினாராம்.. அப்போது, தன்னோடு இருக்கும் பள்ளிப்பட்டு நரசிம்மன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆனந்தன் ஆகிய இருவருக்கும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கிறார்..
அதற்கு முதலில் ஆதரவு கடிதம் கொடுக்கச் சொல்லுங்கள்.. கட்சியில் சீட் கொடுப்பது பற்றி பின்னால் பார்ப்போம் என சொல்லிவிட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி..