1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (09:59 IST)

ஆட்சியை உடனே கலைக்கணும் - தினகரனுக்கு சசிகலா உத்தரவு?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆட்சியை கலைக்க வேண்டும் என சசிகலா விரும்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
அதிமுகவிலிருந்து தினகரன் ஒதுக்கிவைக்கும் முயற்சி மட்டுமே இதுவரை நடந்துவந்தது. தற்போது ஒ.பி.எஸ் மற்றும் எடப்பாடி ஆகிய இருவதும் சேர்ந்து இரு அணியும் ஓரணியான பின், சசிகலாவையும் கட்சியிலிருந்து வெளியே அனுப்பும் வேலையில் அவர்கள் இறங்கிவிட்டனர்.
 
இது தொடர்பாக நேற்றைய தீர்மானத்தில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக  நியமித்த போது, தேர்தல் ஆணையத்திடம் சமர்பித்த பிரமாணப் பாத்திரத்தை வாபஸ் பெறுவதற்காக ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி இருவரும் இன்று டெல்லி செல்கின்றனர். இது சசிகலாவிற்கு கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.


 

 
இதற்கு முன் எடப்பாடி தரப்பு தினகரனிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த போது, இந்த ஆட்சி கலையக்கூடாது. இன்னும் நான்கு ஆண்டுகள் ஆட்சி முழுமையாக இருக்க வேண்டும். எனவே, பொறுமையாக இருங்கள், ஆட்சிக்கு எதிராக எதுவும் பேசாதீர்கள்  என தினகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்களை அமைதிப்படுத்தி வந்தார் சசிகலா. ஆனால், தன்னையே நீக்கும்  முடிவிற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்துவிட்டதால் கடுமையான கோபத்தில் இருக்கிறாராம் 
 
நேற்று சசிலாவிற்கு உணவு கொண்டு சென்ற இளவரசியின் மகன் விவேக்கிடம் “என்னை கட்சியிலிருந்து அனுப்புவதற்காகத்தான் எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் ஒன்று சேர்ந்தார்களா?. இதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாது. இன்னும் 5 நாட்களுக்குள் ஆட்சி கலைய வேண்டும். புதிய முதல்வர் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான காரியங்களை தினகரனையும், திவாகரனையும் செய்ய சொல்” என காட்டமாகவே கூறினாராம்.
 
இது உடனடியாக தினகரன் மற்றும் திவாகரன் தரப்பிற்கும் தெரிவிக்கப்பட்டது. சசிலாவிடமிருந்தே சிக்னல் கிடைத்த விட்டதில் உற்சாகம் அடைந்த தினகரன் அதற்கான காரியங்களில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.