1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala poster viral in Coimbatore

கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர் – சசிக்கலா போஸ்டரால் பரபரப்பு

Tamilnadu
மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிக்கலா கூறி வரும் நிலையில் கோவையில் சசிக்கலாவுக்கு அமமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். இதனால் சசிக்கலாவுடன் பேசி வரும் சிலர் சமீப காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிக்கலாவுக்கு ஆதரவாக கோவையில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 குறைவு: பொதுமக்கள் மகிழ்ச்சி