விண்வெளியில் அமேசான் தலைவர் !
உலகின் பெரும் பணக்கார்களில் ஒருவர் அமேசான் நிறுவன ஜெஃப் பெகாசஸ் விண்வெளிக்குச் சென்றுவந்துள்ளார்.
உலகில் அமேசான் என்ற புத்தக ஆன்லைன் வழியே புத்தகம் விற்பனை செய்த ஜெஃப் பெகாஸ் இன்று ஆன்லைன் வர்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்,. உலகில் முதல் பணக்காரர் என்ற சாதனை படைத்துள்ள ஜெஃப் பேகாஸ் விண்வெளிக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்டார்.
அமேரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை நியூ ஷெப்பர்ட் ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கிளம்பியது அவர் பயணித்த ராக்கெட்.
ஜெஃப் பெகாசுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், மற்றும் வாலிங்பங்க்( 82) என 4 பேர் சென்றனர்,. இந்நிலையில் விண்வெளிக்குச் சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளனர். இதுகுறித்த செய்திகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.