1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:02 IST)

சசிகலா வீடியோ உண்மைதான்; உறுதியாக கூறும் திவாகரன் மகன்

சசிகலா சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்ற போது பதிவான காட்சிகளாக இருக்கலாம் என்று புதிய வீடியோ குறித்து திவாகரன் மகன் ஜெயானந்த் கூறியுள்ளார்.


 

 
சசிகலா சிறைக்கு வெளியே சென்று வருவது போன்ற வீடியோ காட்சி ஏற்கனவே வெளியானது. ஆனால் கிராபிக்ஸ் என்று தினகரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூறிவந்தனர். தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சசிகலா, இளவரசி இருவரும் சாதாரண உடையில் சிறையைவிட்டு வெளியே சென்றுவிட்டு கையில் பையுடன் மெயின் கதவு வழியாக சிறைக்குள் வருகின்றனர். 
 
இந்த வீடியோ சசிகலா மீதான குற்றச்சாட்டை மேலும் வலுவாக்கியுள்ளது. இந்நிலையில் திவாகரன் மகன் ஜெயானந்த் சசிகலா வீடியோ உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
 
தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோ காட்சி உண்மையானவைதான். சறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வர வாய்பில்லை. அவர் சிறைக்குள்ளேயே பார்வையாளர்களை சந்திக்க சென்றபோது பதிவான காட்சிகளாக இருக்கலாம். பாதுகாப்பு நிறைந்த சிறை வளாகத்திற்குள் இவர்கள் மட்டும் எப்படி வெளியே சென்று வர முடியும் என்றார்.
 
கடந்த சனிக்கிழமை புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை விசாரணை அதிகாரியிடம் கொடுத்த டிஐஜி ரூபா கூறியதாவது:-
 
ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் உள்ள பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். இந்நிலையில் சசிகலா எங்கிருந்து வந்தார்? அவரை யார் அனுமதித்தார்கள்? என்று விசாரிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.