திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (18:02 IST)

முன்பொரு காலத்திலே... சசிகலா காலில் விழும் அதிமுகவினர் - வைரல் வீடியோ

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில்  விழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

 
அதிமுக அணி இரண்டாக பிரிந்திருந்தாலும், இரு அணிகளுமே சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்தான் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.
 
முன்னள் முதல்வர் ஜெ. மரணமடைந்த பின், அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அது. அதில், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மஃபா பாண்டியராஜன், வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் சசிகலாவின் காலில் விழுந்து அவரின் ஆசியை பெறுகின்றனர்.
 
இந்த வீடியோவைக் கண்ட பலரும், பதவிக்காக அவர்கள் எப்படி வேண்டுமானாலும் மாறுவார்கள் என்பதற்கு இதே உதாரணம் என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.