ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும் சசிகலா: புதிய வீடியோ வெளியீடு!

ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு திரும்பும் சசிகலா: புதிய வீடியோ வெளியீடு!


Caston| Last Updated: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (11:35 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சிறை விதிகளை மீறியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

 
 
இதனையடுத்து சசிகலா சிறை விதிகளை மீறிய வீடியோ மற்றும் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விவகாரம் பூதாகரமாக வெடிக்க இதுகுறித்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது கர்நாடக அரசு. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி மாற்றம் செய்தது கர்நாடக அரசு.
 
சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் இருந்து வெளியே ஷாப்பிங் செல்வதற்கு தயாராக கையில் பேக்குடன் செல்லும் வீடியோ காட்சி முன்னர் வெளியாகி பெரும் பரபப்பை ஏற்படுத்தி இருந்தது.
 
அந்த வீடியோவில் சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள சசிகலா சுடிதார் அணிந்துகொண்டு கையில் பேக்குடன் எங்கேயோ கிளம்ப தயாராக நிற்பது போல காட்டுகிறது. அவருடன் சிறையில் அடைக்கப்பட்ட அவரது அண்ணன் மனைவி இளவரசி சிகப்பு நிற புடவையில் நிற்கிறார். இந்த வீடியோ கர்நாடக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனையடுத்து விசாரணை அதிகாரி வினய்குமார் பெங்களூர் சிறையில் ஆய்வு நடத்தினார். இந்த விசாரணையின் போது ரூபா சசிகலா சிறை விதிகளை மீறியதற்கான பல ஆதரங்களை தாக்கல் செய்துள்ளார். அந்த ஆதாரத்தில் புதிய வீடியோக்களும் இடம்பெற்றுள்ளது.

 

 
 
அந்த வீடியோ தற்போது ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் சசிகலாவும், இளவரசியும் கைதிகள் அணியும் ஆடையை அணியாமல் சாதாரண ஆடையில் வெளியே இருந்து கையில் பேக்குடன் சிறையின் முக்கிய கேட் வழியாக உள்ளே நுழைகிறார்கள். இது போன்று பல ஆதாரங்களை ரூபா சசிகலாவுக்கு எதிராக வலுவாக தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :